வணக்கம் தோழமைகளே!
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில், ரமா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக, ஆன்லைனில் நான் எழுதிய 'மீண்டும் பூத்தது காதல்' என்ற நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
ரமாலஷ்மி.
கதைச் சுருக்கம்:
பகையின் காரணமாக தத்தம் வாழ்க்கைத் துணையை இழக்கும் தேவாவும், மஹதியும், டெல்லிக்கு தப்பி ஓடி வருகிறார்கள். அங்கே இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட்டு நட்பு மலர்கிறது. இதற்கிடையில் மஹதியை பின் தொடர்கிறான் ஓர் மர்ம மனிதன். அவனால் இவள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இக்கொலை முயற்சியில் இருந்து மஹதி உயிர் தப்பினாளா? யார் அந்த மர்ம மனிதன்? தேவா, மஹதி வாழ்வில் என்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்புடன் சொல்லும் நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்'.