உன் கரம் பற்றி - நாவல் கதைச் சுருக்கம்
உன் கரம் பற்றி - நாவல் கதைச் சுருக்கம்
பெயர் ஒற்றுமையின் காரணமாகப் புகைப்படம் மாறியதால், கோடீஸ்வர வீட்டுப் பெண்ணான கீர்த்தனாவைப் பெண் கேட்டுச் செல்லும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாதவன், உண்மை தெரிந்து நட்புடன் விலகிக் கொள்கிறான். அதேநேரம் உண்மையான மாப்பிள்ளை மாதவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவிட, தன் திருமண விஷயத்தைத் தள்ளிப் போடுகிறாள் கீர்த்தனா.
இந்நிலையில் கீர்த்தனாவின் தந்தை ஓர் விபத்தில் இறந்துவிட, தலைமை பொறுப்பில் அமர்கிறாள் அவள். கீர்த்தனாவின் அந்தஸ்தைப் பார்த்து அவளைத் திருமணம் செய்ய முயல்கிறான் வினோத். ஆனால் கீர்த்தனாவோ மறுத்துவிடுகிறாள். இதனால் தங்கள் இருவரைப் பற்றியும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறான். அதைக் கண்டுபிடித்து வினோத்தை எச்சரிக்கை செய்கிறாள் கீர்த்தனா.
தன் முயற்சி தோல்வியில் முடியவும் கீர்த்தனாவுக்கும் அவள் தங்கை மஞ்சுளாவுக்கும் இருக்கும் விரிசலைப் பயன்படுத்திக்கொண்டு, மஞ்சுளாவை தன் காதல் வலையில் விழ வைக்கிறான் வினோத். விஷயம் கேள்விப்பட்டுத் தங்கைக்குப் புரிய வைக்க முயன்று தோற்றுப் போகும் கீர்த்தனா, மஞ்சுளாவுக்கு விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்து, மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாதவனை அவசர திருமணம் செய்து கொள்கிறாள்.
ஆனால் கீர்த்தனா நினைத்தது நடக்காமல், வினோத்தை அடம்பிடித்துத் திருமணம் செய்து கொள்கிறாள் மஞ்சுளா. திருமணம் முடிந்ததும் மனைவியைப் பயன்படுத்திக்கொண்டு கீர்த்தனாவைத் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கும் வினோத், அவளை வரி ஏய்ப்பு வழக்கில் சிக்க வைக்கிறான். ஆனால் உண்மை வெளியே வர, வினோத்தும் மஞ்சுளாவும் கைது செய்யப்படுகிறார்கள்.
இதனால் கோபமடையும் வினோத், கீர்த்தனாவைக் கொல்ல ஆள் ஏற்பாடு செய்கிறான்.
வினோத்தின் கொலை முயற்சியிலிருந்து கீர்த்தனா தப்பித்தாளா?
வினோத் பற்றிய உண்மை வெளி வந்ததா? மஞ்சுளாவின் நிலை என்ன ஆனது?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், குடும்ப நாவல் உன் கரம் பற்றி.
0 comments
Post a Comment