உயிரில் கலந்தவளே - நாவல் கதைச் சுருக்கம்
மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறாள் கணவனை இழந்த சிந்துஜா. அவளுக்காகப் பெற்றோர் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையான பிரவீன், மருத்துவ மேற்படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்ப, மீண்டும் எழுகிறது திருமணப் பேச்சுக்கள். ஆனால் சிந்துஜாவோ, கணவனின் நினைவில் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லாமல் தவிர்க்கிறாள்.
இந்நிலையில் சிந்துஜா வேலை செய்யும் நிறுவனத்தின் எம்டியான அர்ஜுன், தன் பயிற்சி படிப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறான். ஒரு ப்ராஜெக்ட் விஷயமாகச் சிந்துவை சந்திக்கும் அர்ஜுன், அவளைப் பார்த்து அசிர்ச்சி அடைகிறான். சிந்துஜாவை அவன் இங்கே எதிர்பார்க்கவில்லை.
சிந்துவை பார்த்ததும், கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வர, தனக்குள் புழுங்கி போகிறான் அர்ஜுன். அவளிடம் எங்கே தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவோமோ என்று அஞ்சும் அர்ஜுன், சிந்துவை தன் அலுவகத்திலிருந்து வெளியேற்ற முயல்கிறான்.
எல்லாச் சந்தர்பங்களும் தோல்வியில் முடிய, ஒரு நாள் அவளிடம் தவறாக நடக்க முயல்வது போல நடிக்கிறான் அர்ஜுன். அவனின் நடிப்பை உண்மை என்று நம்பும் சிந்துஜா, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பிரவீனை திருமணம் செய்யச் சம்மதம் சொல்கிறாள் அர்ஜுனிடமிருந்து தப்பிக்க.
அனைவரின் ஆசீர்வாதத்தோடு திருமணம் முடிய, மாப்பிள்ளையாகப் பிரவீன் இல்லாமல் அர்ஜுன் வீற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் சிந்துஜா, அவனிடம் சண்டை போடுகிறாள்.
அதன்பின்பே தெரியவருகிறது அர்ஜுன் தான், சிந்துஜாவின் இறந்து போன கவணன் சஞ்சய் என்று.
சிந்துஜா சஞ்சய் எப்படிப் பிரிந்தார்கள்?
சஞ்சய் எப்படி அர்ஜுனாக மாறினான்?
பதிலை தெரிந்துகொள்ள, படியுங்கள் – உயிரில் கலந்தவளே
0 comments
Post a Comment