கருவறை சொந்தம் - நாவல் கதைச் சுருக்கம்
கதைச் சுருக்கம்
வேலை மாற்றலை காரணமாக வைத்துக்கொண்டு தோழியுடன் பெங்களூரு வருகிறாள் ஆராதனா. அவள் குடியேறிய அபார்ட்மெண்ட் வீட்டின் எதிர் அபார்ட்மெண்ட்டில் குடும்பத்துடன் வசிக்கிறான் மனைவியை இழந்த கெளதம். நாளடைவில் ஆராதனாவுக்கும் கெளதம் குடும்பத்திற்கும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது, குறிப்பாகக் கௌதமின் குழந்தை தேஜஸ்வினியுடன்.
இந்நிலையில் ஆராதனாவின் தோழி வேலையை விட்டு சென்றுவிட, அவளின் துணைக்கு எனப் பெங்களூரு வருகின்றனர் ஆராதனாவின் அக்கா மிருதுளா மற்றும் பாட்டி.
குழந்தையை இழந்து கணவனால் கைவிடப்பட்ட மிருதுளாவுக்கு, தேஜஸ்வினியை பார்த்ததும், அவள் மேல் எதிர்பாரா ஒரு பாசம் உண்டாக, குழந்தைக்குத் தாய்க்குத் தாயாக மாறுகிறாள்.
ஓர் நாள் கௌதமின் பொறுப்பிலிருந்த குழந்தை தேஜஸ்வினி பிள்ளையை வைத்து பிச்சையெடுக்கும் கும்பலால் கடத்தப்பட்டு, பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்படுகிறாள்.
இதனால் கெளதம் மேல் கோபப்பட்டுக் குழந்தையைத் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள் மிருதுளா. இது தவறென்று அவளின் பாட்டி திட்ட, குழந்தையைக் கௌதமிடம் ஒப்படைத்துவிட்டு சென்னைக்குத் திரும்ப முடிவெடுக்கிறாள் மிருதுளா.
அக்காவின் முடிவை தடுக்க முயன்று தோற்றுப் போன ஆராதனா, கௌதமை தனியே சந்திந்து, குழந்தை தேஜஸ்வினி பற்றிய உண்மையைச் சொல்கிறாள்.
இதன் பலனாகக் குழந்தையின் பொருட்டுத் திருமணம் செய்து கொள்கின்றனர் கௌதமும், மிருதுளாவும். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது.
இதற்கிடையில் மிருதுளாவைத் தேடி வரும் அவளின் முன்னாள் கணவன் சந்துரு அவளைத் தன்னுடன் வரும்படி சொல்லி தொல்லை செய்ய அவனைக் கண்டிக்கிறான் கெளதம். இதனால் கோபம் கொள்ளும் சந்துரு, வழக்கறிஞர் மூலம் கௌதமுக்கு நோடீஸ் அனுப்புகிறான்.
நோட்டீசை எடுத்துக்கொண்டு வழக்கறிஞராகப் பனி செய்யும் நண்பனின் தாயை சந்திக்க மனைவியுடன் செல்கிறான் கெளதம். அங்கே அவனைப் பார்க்கும் நண்பனின் அத்தை, குழந்தை தேஜஸ்வினி பற்றி யாருமறியா உண்மையைச் சொல்ல, மகிழ்ச்சியில் திளைத்து போகின்றனர் கௌதமும், மிருதுளாவும்.
சந்துரு மிருதுளா எப்படிப் பிரிந்தனர்?
கௌதமின் மனைவி யாழினிக்கு என்னவாயிற்று?
குழந்தை தேஜஸ்வினி கெளதம் கையில் எப்படிக் கிடைத்தாள்?
குழந்தை தேஜஸ்வினிக்கும், கெளதம் மிருதுளாவுக்கும் என்ன சம்பந்தம்?
தெரிந்துகொள்ளப் படியுங்கள் ‘கருவறை சொந்தம்’ நாவலை.
0 comments
Post a Comment