புதிய வெளியீடு

உன் பாதியும் என் மீதியும்


₹230.00 - Buy Book
Book Cover
INTRODUCTION

ABOUT ME

வணக்கம் தோழமைகளே!

என் பெயர் ரமாலஷ்மி. தமிழ் நாவலாசிரியர். 2015 முதல் கதைகள் எழுதி வருகிறேன். எனது முதல் நாவல் 'என் நெஞ்சில் நீ நிறைந்தாய்' 2016ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவந்தது. இதுவரை பதினொரு நாவல்கள் எழுதியுள்ளேன். அவற்றில் பத்து புத்தகமாக வெளிவந்துள்ளது. எனது புத்தகப் பட்டியலைக் கீழே காணலாம்.

அன்புடன்,
ரமாலஷ்மி.

WORKS

BOOKS

image
BUY      Read     
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
image
BUY      Read
img

Reader 1

Entrepreneur

karuvarai sontham story made me shed tears. one of my favourite novel.expecting lot more from you.

img

Reader 2

House wife

samvritha novel the best horror story ive ever read. very good writing.

img

Reader 3

techie

very good writing with twists here and there. All your novels were awesome.

Blog

Latest Blog Posts

புத்தக வெளியீடு


வணக்கம் தோழமைகளே!
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரமா பதிப்பகம் சார்பில், 'உன் பாதியும் என் மீதியும்' மற்றும் ‘மாசறு நிலவே’ என்ற இரண்டு நாவல் புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
புத்தகம் வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொள்ளவும்.
பிரியா நிலையம் - 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
விலை விவரம்:
மாசறு நிலவே - ரூ.190.00
உன் பாதியும் என் மீதியும் - ரூ.230.00
அன்புடன்,
ரமாலஷ்மி.

கதைச் சுருக்கம்:
மாசறு நிலவே
அழகான குடும்பமாய் வாழும் காயத்ரி, சூழ்நிலையின் காரணமாக ஆபத்தில் சிக்க, அவளின் மரியாதை கேள்விக்குறியாக்கப்பட்டு, நிலைகுலைந்து போகிறது அவளின் குடும்ப வாழ்க்கை. அன்னையாக இருக்கவேண்டியவர் அவளைத் தேளாய் கொத்த, காக்கவேண்டியவனோ விலக்கி வைக்கிறான். தன் மரியாதையை காப்பாற்ற அவள் என்ன முடிவெடுக்கிறாள்? அவள் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? மனித உணர்வுகளை அழகாய் எடுத்துச்சொல்கிறது ‘மாசறு நிலவே’ நாவல்.

உன் பாதியும் என் மீதியும்
தனக்கெதற்கு வம்பு என்ற வாழும் சமுதாயத்தில், அநீதியை எதிர்த்துத் தனியே சட்ட போராட்டம் நடத்தும் மைதிலி, அவள் போராட்டத்தை மட்டுமில்லாமல் அவளின் உயிரையும் காவு வாங்க துடிக்கும் வைபவ். மைதிலிக்கு அரணாய் இருவர், அரவிந்த் மற்றும் ரிஷி. அவளின் போராட்டம் வெற்றி பெற்றதா? துணையாய் வந்தவன் வாழ்கையில் இணைந்தானா? என்பதை விறுவிறு சஸ்பென்ஸ் மற்றும் மெல்லிய காதலுடன் சொல்கிறது, ‘உன் பாதியும் என் மீதியும்’ நாவல்.




எங்கிருந்தோ வந்தாள் - புத்தக வெளியீடு

 

வணக்கம் தோழமைகளே!

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புத்தாண்டு தினத்தில் ஓர் மகிழ்ச்சியான செய்தி. வரும் சென்னை புத்தக கண்காட்சிக்கு, எழுத்தாளர் மல்லிகா மணிவண்ணன் அக்காவின் தளத்தில் நடைபெற்ற ‘கனவுப்பட்டறை கதைத் தொழிற்சாலை போட்டியில் வாசகர்களின் வரவேற்பை பெற்ற ‘எங்கிருந்தோ வந்தாள்’ நாவல் ரமா பதிப்பகம் சார்பாக புத்தகமாக வெளியிடப்படுகிறது.

    முதல் முயற்சியாக படங்களும் இந்நாவலில் இடம்பெறுகிறது!

    கதையின் நாயகி மாதுரி மேத்தாவின் ஆளுமையும், துரோகத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிராக அவளின் போராட்டமும் வாசகர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பட்ட தோழமைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, பாராட்டையும் பெற்றுத் தந்தது எழுத்தாளராக என் எழுத்துக்கு கிடைத்த கூடுதல் அங்கீகாரம்.

    எனது நாவல்களின் வரிசையில் எங்கிருந்தோ வந்தாள் நிச்சயம் ஒரு மைல்கள். இந்நாவலை இந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் எழுத, வாசர்களின் தொடர் ஆதரவும், விமர்சனமும் மிக முக்கியப் பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத ஒன்று.

    பிரியா நிலையம் மற்றும் அருண் பதிப்பகத்தில் விரைவில் இப்புத்தகம் கிடைக்கும். அரங்குகள் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

அன்புடன்,
ரமாலஷ்மி.

கதைச்சுருக்கம்:
    மனநல காப்பகத்தின் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் நாயகியை கொல்ல முயற்சிகள் நடைபெறுகிறது. நாயகன் ASP சுதர்ஷன் மற்றும் பத்திரிக்கைத் துறையை சேர்ந்த மிதுன் சஞ்சனா ஜோடி நாயகி யார் என்ற உண்மையை துப்பறிய, நாயகியின் கணவன் தான் கொலையாளி என்ற உண்மை தெரிகிறது.
    வைர வியாபாரியின் மகளான, வழக்கறிஞர் மாதுரி, எப்படி மனநல காப்பகத்தில்? அவள் கணவனே அவளைக் கொல்லத் துடிப்பதின் காரணம் என்ன? இவனுக்குப் பின்னால் இருக்கும் அந்த உச்ச அதிகாரம் படைத்த நபர் யார்? அவரின் பங்கு இதில் என்ன? என்பதை விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் கலந்து சொல்கிறது இந்நாவல்.

உன்னாலே உயிர் வாழ்கிறேன் - வெளியீடு

 

வணக்கம் தோழமைகளே!
அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில், ரமா பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக, ஆன்லைனில் நான் எழுதிய 'மீண்டும் பூத்தது காதல்' என்ற நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அருண் பதிப்பகம் - 9003145749
பிரியா நிலையம் - 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321

அன்புடன்,
ரமாலஷ்மி.

கதைச் சுருக்கம்:
பகையின் காரணமாக தத்தம் வாழ்க்கைத் துணையை இழக்கும் தேவாவும், மஹதியும், டெல்லிக்கு தப்பி ஓடி வருகிறார்கள். அங்கே இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட்டு நட்பு மலர்கிறது. இதற்கிடையில் மஹதியை பின் தொடர்கிறான் ஓர் மர்ம மனிதன். அவனால் இவள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இக்கொலை முயற்சியில் இருந்து மஹதி உயிர் தப்பினாளா? யார் அந்த மர்ம மனிதன்? தேவா, மஹதி வாழ்வில் என்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்புடன் சொல்லும் நாவல் 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்'.


உன் கரம் பற்றி புத்தக வெளியீடு

 


வணக்கம் தோழமைகளே!

வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். கடந்த சில மாதங்களாகவே முயன்று இப்பொழுதுதான் இதற்கான நேரம் அமைந்துள்ளது. விஷயம் என்னவென்றால்,
கடவுள் அருளால், ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பதிப்பகத்தை தொடங்கியுள்ளேன். இனி எனது நாவல்கள் ‘ரமா பதிப்பகம்’ மூலம் புத்தகங்களாக வெளியிடப்படும்.
முதல் வெளியீடாக, கீர்த்தனா – மாதவன் நாயகன் நாயகியாக உங்களை கவர்ந்த ‘உன் கரம் பற்றி’ நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அருண் பதிப்பகம் – 9003145749
பிரியா நிலையம் – 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
எனது எழுத்துப் பயணம் இதுநாள்வரை தொடர்வதற்கு வாசகர்களின் ஆதரவு மிக முக்கியக் காரணம். அவர்களின் அன்பும் ஆதரவுமே, எனது கதைகளுக்கு அழகும், கூடுதல் பலமும் சேர்க்கிறது. வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாசகர்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து நல்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பயணத்தை ‘உன் கரம் பற்றி’ என்ற இப்புத்தகத்தின் மூலம் தொடங்குகிறேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி.

கதையைப் பற்றிய சிறு குறிப்பு:
கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனாவுக்கும், மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த மாதவனுக்கும் சூழ்நிலை காரணமாக திருமணம் நடக்க, அக்கா கீர்த்தனாவை வெறுக்கும் மஞ்சுளா, அவளை பழி வாங்கும் பொருட்டு, கீர்த்தனாவின் எதிரியான வினோத்துடன் கை கோர்க்கிறாள்.
கீர்த்தனா – மாதவன் திருமணம் எதற்காக நடந்தது? கீர்த்தனாவின் எண்ணம் நிறைவேறியதா? மாதவனுடனான அவளுடைய திருமணம் அவளுக்குப் பலம் சேர்த்ததா? என்பதைப் பாசம், காதல், துரோகம், கண்ணீர், பகை என அனைத்தின் கலவையாகச் சொல்லும் அழகான குடும்பக் காதல் கதை, ‘உன் கரம் பற்றி’.

மாசறு நிலவே - Ongoing Novel

வணக்கம் தோழமைகளே !

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 

எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இதோ அடுத்தக் கதையுடன் வந்துவிட்டேன். ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்கிழமைகளில் அத்தியாயம் பதிவு செய்யப்படும். கீழே உள்ள லிங்கில் கதையை படிக்கலாம்.


Read Here

உன் கரம் பற்றி

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில்  உன் கரம் பற்றி என்ற புதிய நாவலை தொடங்கயிருக்கிறேன். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அத்தியாயங்கள் பதியப்படும். கீழ்க்கண்ட லிங்கில் கதையை படிக்கலாம்.

Read Here
Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook