உன் பாதியும் என் மீதியும் - நாவல் கதைச் சுருக்கம்
உன் பாதியும் என் மீதியும் - நாவல் கதைச் சுருக்கம்
கணவனை இழந்து மகன் ரோஹித்துடன் தனியே வசிக்கிறாள் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட மைதிலி. தான் வேலை செய்த நிறுவனம் மருந்தில் கலப்படம் செய்வதை அறிந்து அதன் எம் டி வைபவ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறாள். ஆனால் வைபவின் மிரட்டலுக்குப் பயந்து பின்வாங்கும் மைதிலியின் வழக்கறிஞர், அவளைப் பிரபல வழக்கறிஞரான மாதுரியிடம் அனுப்பி வைக்கிறார்.
நடந்த நிகழ்வுகளை மைதிலியின் மூலம் கேட்டறியும் மாதுரி வழக்கை தன் ஜுனியர் அரவிந்த்திடம் ஒப்படைக்கிறாள். இதற்கிடையில் வைபவின் அடியாளைப் பின்தொடர்ந்து சென்று ஆபத்தில் சிக்கும் மைதிலியைக் காப்பாற்றும் அரவிந்த், பாதுகாப்பு கருதி அவளைத் தன் நண்பன் ரிஷியின் வீட்டில் தங்க வைக்கிறான்.
வைபவோ தன் அண்ணன் அரவிந்த் மைதிலியின் வழக்கை எடுத்து நடத்துவது தெரிந்து அவனை மிரட்டுகிறான். ஆனால் அவனோ தம்பியின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் வழக்கை நடத்துவதில் உறுதியாக இருக்கிறான்.
இதனால் கோபம்கொள்ளும் வைபவ், தான் தப்பிப்பதற்காக வழக்கை மைதிலி பக்கம் திசை திருப்புகிறான். அதை நிரூபிக்கக் கீழான செயலிலும் ஈடுபடுகிறான்.
அதேநேரம் அரவிந்த்தோ மாதுரியின் கணவன் சுதர்ஷன் உதவியுடன், வைபவுக்கு உதவி செய்தவர்களைக் கைது செய்ய அவர்களின் வாக்குமூலம் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வருகிறது.
முடிவில் வைபவின் குற்றம் நிரூபணமாக, அவனுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. விவரம் அறிந்து நாட்டை விட்டு தப்ப முயலும் வைபவ் விபத்தில் சிக்குகிறான்.
மைதிலி நிரூபிக்கப் போராடும் அந்த உண்மை என்ன?
வழக்கு விசாரணையின் போது வெளியாகும் அந்தத் திடுக்கிடும் தகவல்கள் என்ன?
வைபவின் நிலைமை இறுதியில் என்ன ஆனது?
தெரிந்துகொள்ளப் படியுங்கள் சஸ்பென்ஸ் திரில்லருடன் கூடிய கோர்ட்ரூம் நாவல், 'உன் பாதியும் என் மீதியும்'
0 comments
Post a Comment