மாசறு நிலவே நாவல் கதைச் சுருக்கம்
மாசறு நிலவே நாவல் கதைச் சுருக்கம்
கணவன் குடும்பத்துடன் வசிக்கிறாள் முப்பத்தியாறு வயது காயத்ரி. அவளின் நாத்தனார் வைஷ்ணவிக்குத் திருமணம் நிச்சியக்கப்படுகிறது. ஓர் நாள் வீட்டில் பொய் கூறிவிட்டு வருங்காலக் கணவனுடன் பார்ட்டி செல்லும் வைஷ்ணவி வீட்டிற்கு வர தாமதமாகிவிட, இது தெரியாமல் வைஷ்ணவியைப் பதற்றத்துடன் தேடுகிறது அவள் குடும்பம்.
அப்படித் தேடி செல்லும் வழியில் கயவர்கள் சிலரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் காயத்ரி. வேதனையில் மூழ்குகிறது அவளின் குடும்பம். காயத்ரியை பற்றிய செய்தி பத்திரிகைகளில் பரவுகிறது. இச்செய்தி கேள்விபட்டு வைஷ்ணவியின் திருமணம் நின்றுபோகிறது. இது தெரியாமல் மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வீடு வந்து சேரும் காயத்ரி நடந்து முடிந்த கொடூரத்தின் தாக்கத்தில் அறைக்குள் முடங்கிப் போகிறாள்.
மனைவியைத் தேற்ற முயன்று தோற்றுப் போகிறான் ஸ்ரீராம். மகளின் திருமணம் நின்றுபோன கோபத்தில் மருமகளை வெறுக்க ஆரம்பிக்கும் காயத்ரியின் மாமியார், அவளை விவாகரத்துச் செய்யச் சொல்லி மகனை வற்புறுத்துகிறார்.
வேறு வழியில்லாமல் மனைவியை விவாகரத்துச் செய்கிறான் ஸ்ரீராம். குடும்பத்தைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறும் காயத்ரி, ராகவின் வீட்டில் தங்குகிறாள். இதன்பின் மனைவி இல்லாமல் பிள்ளைகளைச் சமாளிக்கத் தடுமாறும் ஸ்ரீராம் இரண்டாண்டுகள் கழித்து மனைவியைத் தேடி வருகிறான்.
கணவனுடன் மீண்டும் இணைகிறாளா காயத்ரி?
ராகவிற்கும் காயத்ரிக்கும் என்ன சம்பந்தம்?
தெரிந்துகொள்ள படியுங்கள் 'மாசறு நிலவே'
0 comments
Post a Comment