எங்கிருந்தோ வந்தாள் - நாவல் கதைச் சுருக்கம்
எங்கிருந்தோ வந்தாள் - நாவல் கதைச் சுருக்கம்
மனநல காப்பகத்தின் தீ விபத்திலிருந்து ஏ சி பி சுதர்ஷனால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் மாதுரி. அங்கே அவளைக் கொலை செய்ய முயற்சி நடக்க, அதிலிருந்து மாதுரியைக் காப்பாற்றுகிறார்கள் பத்திரிகைத் துறையைச் சேர்ந்த மிதுன், சஞ்சனா ஜோடி.
மாதுரியின் பின்னணியின் உண்மையை அவளின் குடும்பத்தினரிடம் விசாரிக்கிறான் சுதர்ஷன். கிடைத்த பதில் அவனை அதிர்ச்சி அடையச் செய்கிறது. அடுத்தகட்ட விசாரணையில் இறங்குகிறான்.
மறுபக்கம், மாதுரியை யார், எதற்காகக் கொலை செய்ய முயல்கிறார்கள் என்ற உண்மையைக் கண்டுபிடிக்கத் துப்பறியும் முயற்சியில் இறங்குகிறது மிதுன் தம்பதி.
மாதுரியைக் கொலை செய்ய முயல்வது, சென்னை மாவட்ட ஆட்சியர் நந்தாவும், தமிழக முதல்வர் நரசிம்மன் என்ற உண்மை தெரியவர, அதிர்ந்து போகின்றனர் இருவரும்.
அம்முயற்சியில் மிதுன் தம்பதி ஆபத்தில் சிக்கிக்கொள்ள, இருவரையும் காப்பாற்றுகிறான் சுதர்ஷன். அவனிடம் தாங்கள் கண்டுபிடித்த உண்மையைப் பகிர்ந்துகொண்ட இருவரும் அதற்கு ஆதாரமாய் ஓர் பென்றைவ் இருப்பதாய் சொல்ல, அதைத் தேடும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகின்றனர் மூவரும்.
அதேநேரம் மருத்துவமனையில் மாதுரி கண்விழித்த செய்தி கேள்விப்பட்டு, அவளிடம் தன் விசாரணையைத் தொடர்கிறான் சுதர்ஷன். நடந்துமுடிந்த உண்மை முழுவதையும் சொல்லி முடிக்கும் மாதுரி, இதற்கு மேல் காவல்துறையின் உதவி வேண்டாம் என்று மறுத்துவிடுகிறாள்.
அதன்பின் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பும் மாதுரி, தன் தந்தையின் உதவியாளனான குருவுடன் கை கோர்க்கிறாள், எதிரிகளைப் பழிவாங்க.
மாதுரி யார்? அவளின் பின்னணி என்ன?
நந்தாவுக்கும் அவளுகும்மான தொடர்பு என்ன?
மாதுரி எப்படி மனநல மருத்துவமனையில் வந்து சேர்ந்தாள்?
நந்தாவும், நரசிம்மனும் மாதுரியை எதற்காகக் கொலை செய்ய முயல்கின்றனர்?
சுதர்ஷன் கண்டுபிடித்த அந்தப் பென்றைவில் என்ன இருக்கிறது?
கயவர்களை மாதுரி என்ன செய்தாள்?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த துப்பறியும் நாவல், 'எங்கிருந்தோ வந்தாள்'
0 comments
Post a Comment