காதல் கலாட்டா - நாவல் கதைச் சுருக்கம்
காதல் கலாட்டா - நாவல் கதைச் சுருக்கம்
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்கிறாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாதங்கி. அதே அமெரிக்காவில் இந்தியத் தாய்க்கும், அமெரிக்கத் தந்தைக்கும் பிறந்த வருண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். வனவிலங்கு சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றிற்காக மாதங்கியும் வனவிலங்கு புகைப்படக் கலைஞனான வருணும் சந்திக்கின்றனர். வருணோ மாதங்கி மேல் காதல் கொள்ள இவளோ அவனைத் தவிர்கிறாள்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக அனாதை ஆசிரமம் செல்லும் மாதங்கி அங்கே தன் உயிர்த் தோழியின் குழந்தை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஆசிரம நிர்வாகியின் உதவியுடன் குழந்தையைப் பற்றி விசாரிக்க, அதன்பின்பே தெரிய வருகிறது தன் தோழியும் அவள் கணவனும் ஓர் விபத்தில் இறந்துவிட, தாய்மாமனால் ஆசிரமத்தில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது என்று.
தன்னைப் படிக்க வைத்த தோழியின் குழந்தையைத் தானே வளர்க்க முடிவு செய்கிறாள் மாதங்கி. ஆனால் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே குழந்தையைத் தத்து கொடுக்க முடியும் என்று சொல்லி விடுகிறது ஆசிரம நிர்வாகம். வேறு வழியில்லாமல் வருணின் உதவியை நாடுகிறாள் மாதங்கி. அவனும் சம்மதிக்கவே, போலியான திருமணச் சான்றிதழைக் காட்டி குழந்தையைத் தத்து எடுக்கிறாள் மாதங்கி.
அடுத்த ஒரு மாதத்தில் அவள் வீட்டுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வருகின்றனர் ஆசிரம நிர்வாகிகள். வருணின் உதவியுடன் எப்படியோ சமாளித்து விடுகிறாள் மாதங்கி.
ஒவ்வொரு மாதமும் இன்ஸ்பெக்ஷன் தொடரும் என்பதால், மாதங்கியின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறான் வருண். அவனின் நற்குணங்கள் கண்டு அவன் மேல் காதல் கொள்கிறாள் மாதங்கி.
மாதங்கியையும் வருணையும் ஒன்றாகப் பார்த்துவிடும் வருணின் பெற்றோர், மாதங்கியை தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். விரைவில் உண்மை தெரிய வருகிறது.
இதற்கிடையில் வருண் மறைத்து வைத்திருந்த உண்மை மாதங்கிக்குத் தெரியவர, கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் மாதங்கி. அவளைச் சமாதானம் செய்து, இரு வீட்டுச் சம்மதத்தோடு கரம் பிடிக்கிறான் வருண்.
மாதங்கியின் தோழிக்கு என்னவாயிற்று?
வருண் மறைத்து வைத்திருந்த அந்த உண்மை என்ன?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், காதலும் நகைச்சுவையும் கலந்த குடும்ப நாவல் 'காதல் கலாட்டா'
0 comments
Post a Comment