உன் கரம் பற்றி புத்தக வெளியீடு
வணக்கம் தோழமைகளே!
வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். கடந்த சில மாதங்களாகவே முயன்று இப்பொழுதுதான் இதற்கான நேரம் அமைந்துள்ளது. விஷயம் என்னவென்றால்,
கடவுள் அருளால், ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பதிப்பகத்தை தொடங்கியுள்ளேன். இனி எனது நாவல்கள் ‘ரமா பதிப்பகம்’ மூலம் புத்தகங்களாக வெளியிடப்படும்.
முதல் வெளியீடாக, கீர்த்தனா – மாதவன் நாயகன் நாயகியாக உங்களை கவர்ந்த ‘உன் கரம் பற்றி’ நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
அருண் பதிப்பகம் – 9003145749
பிரியா நிலையம் – 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
எனது எழுத்துப் பயணம் இதுநாள்வரை தொடர்வதற்கு வாசகர்களின் ஆதரவு மிக முக்கியக் காரணம். அவர்களின் அன்பும் ஆதரவுமே, எனது கதைகளுக்கு அழகும், கூடுதல் பலமும் சேர்க்கிறது. வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாசகர்கள் தங்கள் ஆதரவை தொடர்ந்து நல்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ‘ரமா பதிப்பகம்’ என்ற புதிய பயணத்தை ‘உன் கரம் பற்றி’ என்ற இப்புத்தகத்தின் மூலம் தொடங்குகிறேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.
கதையைப் பற்றிய சிறு குறிப்பு:
கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனாவுக்கும், மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த மாதவனுக்கும் சூழ்நிலை காரணமாக திருமணம் நடக்க, அக்கா கீர்த்தனாவை வெறுக்கும் மஞ்சுளா, அவளை பழி வாங்கும் பொருட்டு, கீர்த்தனாவின் எதிரியான வினோத்துடன் கை கோர்க்கிறாள்.
கீர்த்தனா – மாதவன் திருமணம் எதற்காக நடந்தது? கீர்த்தனாவின் எண்ணம் நிறைவேறியதா? மாதவனுடனான அவளுடைய திருமணம் அவளுக்குப் பலம் சேர்த்ததா? என்பதைப் பாசம், காதல், துரோகம், கண்ணீர், பகை என அனைத்தின் கலவையாகச் சொல்லும் அழகான குடும்பக் காதல் கதை, ‘உன் கரம் பற்றி’.
0 comments
Post a Comment