என் நெஞ்சில் நீ நிறைந்தாய் - நாவல் கதைச் சுருக்கம்
என் நெஞ்சில் நீ நிறைந்தாய் - நாவல் கதைச் சுருக்கம்
நண்பன் ஜீவாவுடன் சேர்ந்து சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறான் ஆதித்யன். அவனிடம் உதவியாளராக வந்து வேலைக்குச் சேருகிறாள் மித்ரா. இருவருக்குமிடையில் நல்ல நட்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மித்ராவின் வீட்டில் அவளுக்குத் திருமணம் நிச்சியக்கப்படுகிறது.
இந்நிலையில் அலுவலக பார்டி ஒன்றில் கலந்துவிட்டுத் திரும்புகையில் ஆபத்தில் சிக்கும் மித்ராவை காப்பாற்றுகிறான் ஆதி. அந்த முயற்சியில் மித்ராவால் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலைப் பழி ஆதி மேல் விழ, அவன் கைது செய்யப்படுகிறான். ஆனால் உண்மையை நீதிமன்றத்தில் வந்து சொல்லிவிடுகிறாள் மித்ரா. தற்காப்புக்காக நடந்த கொலை என்பதால் இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்தச் சம்பவத்தால் மித்ராவின் திருமணம் நின்றுபோகிறது. இதனால் ஆதிக்கும் மித்ராவுக்கும் திருமணம் நடக்கிறது.
இருவருக்குமிடையில் புரிதல் உண்டான அந்த நேரம், ஆதிக்கு ஏற்கனவே பிரியாவுடன் திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு அவள் தற்கொலை செய்துகொண்ட உண்மை மித்ராவுக்குத் தெரியவருகிறது.
பிரியாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற உண்மையை ஜீவா மூலம் தெரிந்துகொள்ளும் மித்ரா, ஆதாரங்களைச் சேகரிக்கிறாள், சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க.
பிரியா ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?
அவளின் முடிவுக்கு யார் காரணம்?
மித்ராவின் முயற்சி வெற்றி பெற்றதா?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், காமெடி ரொமான்ஸ் நாவல் - என் நெஞ்சில் நீ நிறைந்தாய்.
0 comments
Post a Comment