வரமாய் வந்தவளே - நாவல் கதைச் சுருக்கம்
வரமாய் வந்தவளே - நாவல் கதைச் சுருக்கம்
மாமனார் மேல் உள்ள கோபத்தில் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறாள் கர்ப்பிணியான மதிவெண்பா. அவளைச் சமாதானம் செய்யப் பல முயற்சி செய்து தோற்றுப் போகிறான் கணவன் மதிமாறன்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வர, மாமனாரை எதிர்த்துப் போட்டியிடுகிறாள் வெண்பா. கட்சி இளைஞர்கள் சிலரின் உதவியுடன் மாமனார் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை ரகசியமாகப் படம்பிடித்து அவற்றைத் தேர்தலுக்கு முன்தினம் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறாள். இதனால் மக்கள் மத்தியில் வெண்பாவுக்கு ஆதரவு பெருகுகிறது.
வெண்பாவின் செயலால் கோபம்கொள்ளும் ஆளும் கட்சி, வாக்கு எண்ணிக்கை நாளன்று கலவரத்தில் ஈடுபடுகின்றனர். இதில் சிக்கிக்கொள்ளும் வெண்பாவுக்கு வயிற்றில் அடிப்படப் பிரசவ வலி உண்டாகிறது.
விஷயம் கேள்விப்பட்டு விரைந்து வரும் மாறன் மனைவியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான். இரட்டை குழந்தைகள் பிறக்கிறது மாறன் தம்பதிக்கு.
தேர்தல் முடிவுகள் வெளியாக, வெற்றி பெறும் வெண்பா பதவி ஏற்பு தொடர்பாகச் சென்னை செல்கிறாள். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளைத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான் மாறன்.
சென்னையிலிருந்து திரும்பும் வெண்பா விஷயம் கேள்விப்பட்டுக் கணவனிடம் சண்டையிடுகிறாள். ஆனால் மாறனோ குழந்தை வேண்டுமெனில் தன்னுடன் ஒரு வருட காலம் ஒன்றாக வாழ வேண்டுமென நிபந்தனை விதிக்கிறான். குழந்தைகளுக்காகக் கணவனின் நிபந்தனைக்குச் சம்மதிக்கிறாள் வெண்பா.
வெண்பாவின் வேலை பொருட்டு இருவரும் சென்னைக்குக் குடிபெயர்கிறார்கள். மனைவியையும், பிள்ளைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறான் மாறன். ஆனால் வெண்பாவோ, பதவியைப் பயன்படுத்திக்கொண்டு மாமனாருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள்.
இதற்கிடையில் வெண்பாவை கடத்தும் மர்ம நபர்கள் அவளைக் கொலை செய்ய முயற்சிக்க, மனைவியைக் காப்பாற்றி அவளுடன் இணைகிறான் மதி மாறன்.
மாமனார் மெல் வெண்பா கோபம் கொள்ள என்ன காரணம்?
வெண்பாவை கடத்தியது யார்?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், அரசியல் களத்தை மையமாக வைத்து வித்தியாசமாக எழுதப்பட்ட காதல் மற்றும் குடும்ப நாவல் வரமாய் வந்தவளே.
0 comments
Post a Comment