உன்னாலே உயிர் வாழ்கிறேன் - நாவல் கதைச் சுருக்கம்.
உன்னாலே உயிர் வாழ்கிறேன் - நாவல் கதைச் சுருக்கம்.
மனைவியை இழந்து டெல்லி வரும் தேவா, அங்குள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறான். அவன் அலுவலகத்தில் வந்து வேலைக்குச் சேர்கிறாள் கர்ப்பிணியான மஹதி.
இருவரின் வீடுகளும் ஒரே பகுதியில் இருப்பதால், இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்படுகிறது.
அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் மஹதிக்கு ஏதோ ஒரு ஆபத்தை உணர்ந்து அவளிடம் கேட்கிறான் தேவா. ஆனால் அவளோ உண்மையைச் சொல்ல மறுத்து விடுகிறாள். இருந்தும் மஹதியை பாதுகாக்கிறான் தேவா.
இதற்கிடையில் கலவரம் ஒன்றில் மாட்டிக்கொள்ளும் மஹதிக்கு பிரசவ வலி உண்டாக அவளை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்கான பணத்தைத் தானே கட்டுகிறான் தேவா. குழந்தையைப் பார்க்க வரும் தேவாவின் பெற்றோர் மூலம், மஹதி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள் என்ற உண்மை வெளி வருகிறது.
மருத்துவமனை வாசம் முடிந்து வீடு திரும்பும் மஹதியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அவளை எப்படியோ காப்பாற்றும் தேவா, யாரென்றே உண்மையைக் கேட்க மாமனார் பாண்டிக்கும் தனக்கும் இருக்கும் பிரச்சனையைப் பற்றிச் சொல்லும் மஹதி தன்னால் தேவாவுக்கு ஆபத்து வேண்டாம் என்ற எண்ணத்தில், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
ஆனால் அவளின் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் தேவா, மஹதியை அழைத்துக்கொண்டு பாண்டிய சந்திக்கச் செல்கிறான். ஆனால் அங்கே அவர்களுக்குக் கிடைக்கிறது ஓர் அதிர்ச்சியான தகவல்.
மஹதியை ஏன் பாண்டியன் கொல்ல முயல்கிறார்? அதற்கான காரணம் என்ன?
பாண்டியின் முயற்சி வெற்றி பெறுகிறதா இல்லையா?
பாண்டியனைச் சந்திக்கச் செல்லும் இடத்தில் கிடைக்கும் அந்த அதிர்ச்சி தகவல் என்ன?
தெரிந்துகொள்ளப் படியுங்கள், காதலும் எமோஷனலும் நிறைந்த நாவல், 'உன்னாலே உயிர் வாழ்கிறேன்'
0 comments
Post a Comment