சம்விரிதா நாவல் கதைச் சுருக்கம்
சம்விரிதா நாவல் கதைச் சுருக்கம்
திரைப்படத் துறையின் பிரபல நட்சத்திர ஜோடி, துஷ்யந்த் - மந்தரா, ஒரு படப்பிடிப்பிற்காகப் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கொள்ளர்பட்டி கிராமத்திற்குச் செல்கின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறது ஓர் அமானுஷ்ய உருவம்.
கொள்ளர்பட்டியில் உள்ள ஓர் அரண்மனையில் படக்குழு தங்க, அதன்பின் சில பல அமானுஷ்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நிகழ ஆரம்பிக்கிறது, அதைத் தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர் ஸ்டீபனும், இயக்குநர் பிரம்மாவும் கொடூரமான முறையில் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்,
இதனால் மிரண்டு போகும் துஷ்யந்தும், மந்த்ராவும் அவ்வூர் பூசாரியின் உதவியை நாடுகின்றனர். அவரோ தன் சக்தியின் மூலம் துஷ்யந்தை கொல்ல கோபத்துடன் ஒரு பெண்ணின் ஆத்மா காத்திருப்பதாகக் கணித்துச் சொல்கிறார்.
தன்னால் கொல்லப்பட முன்னாள் நடிகை நக்ஷத்திரா தான் பூசாரி சொல்லும் பெண்ணின் ஆத்மா என்பதைப் புரிந்துகொண்ட துஷ்யந்தும் மந்த்ராவும் உடனடியாகக் கிராமத்தை விட்டுப் புறப்பட முயல, அவர்களைத் தாக்குகிறாள் நக்ஷத்திரா. பூசாரியின் உதவியுடன் எப்படியோ தப்பிப் பிழைத்து சென்னைக்கு வந்து சேரும் இருவரும், பூசாரி கொடுத்த தாயத்தைப் பாதுகாப்புக்காகக் கையில் கட்டிக் கொள்கின்றனர்.
அடுத்து வந்த சில நாட்களில், துஷ்யந்தும் மந்த்ராவும் திருமணம் செய்து கொள்கின்றனர். இயக்குநர் பிரம்மாவின் இறப்பினால் நின்று போன படத்தின் படப்பிடிப்புச் சென்னையில் செட் போடப்பட்டு மீண்டும் தொடர்கிறது. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் கார் விபத்தில் கொல்லப்படுகிறாள் மந்தரா.
மனைவி இறந்த பீதியில் காவல்துறையின் உதவியை நாடுகிறான். அதையும் மீறி அவனையும் கொடூரமான முறையில் கொன்று தன் பழியைத் தீர்த்துக் கொள்கிறாள் நக்ஷத்திரா என்கிற மாயா.
மாயா எப்படிப் பிரபல நடிகை நக்ஷத்திராவாகா மாறினாள்?
நக்ஷத்திராவின் மரணத்தில் துஷ்யந்த், மந்தரா, பிரம்மா மற்றும் ஸ்டீபனின் பங்கு என்ன?
பதிலைத் தெரிந்துகொள்ளப் படியுங்கள், திகிலூட்டும் அமானுஷ்ய நாவல் 'சம்விரிதா'
0 comments
Post a Comment