என் நெஞ்சில் நீ நிறைந்தாய் - அத்தியாயம் 01


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

    என்று பிள்ளையார் துதி பாடிக்கொண்டிருந்தார், இந்த வீட்டின் ராணி. அதாங்க நம்ம குடும்பத் தலைவி காயத்ரி.

    ஆனால் அதற்கு நேர் மாறாக, லேட்டஸ்ட் ஹிப் ஹாப் பாடல் ஒன்றை ஹோம் தியேட்டரில், வீடே அதிரும்படி ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள் இந்த வீட்டின் ஒரே இளவரசி மித்ரா.

    இவை அனைத்தும் நடந்தேறிக் கொண்டிருந்தது, சென்னையின் தகவல் தொழில்நுட்ப சாலை என்று அழைக்கபடும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மினி பங்களாவில்.

    “மித்ரா அந்த வால்யுமை கொஞ்சம் கொறை. காது பிஞ்சுரும் போல இருக்கு. தினமும் இவளோட போராட்றதே வேலையா போச்சு!.” என்று கோவத்தில் கத்தினார் காயத்ரி.

    அதே நேரம் இந்த வீட்டின் ராஜா, அதாங்க நம்ம குடும்பத் தலைவர் ராமநாதன், “காயத்ரி கொஞ்சம் காபி கொண்டாம்மா.” என்று கூறிக் கொண்டு சோபாவில் அமர்ந்து, அன்றைய நாளின் செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தார்.

    “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்.” என்று கணவனைக் கடிந்து கொண்டே காபி டம்ப்ளரை ‘னனங்’ என்று டேபிள் மீது வைத்தார் காயத்ரி.

    “ஏன் எப்ப பாரு அவள திட்டிக் கிட்டே இருக்க. அவ பாட்டுக்கு ப்ரீயா இருந்துட்டு போறா. நீ ஏன் அவள கவனிக்கற. என்னைக் கவனி.” என்று மனைவியைச் செல்லம் கொஞ்சினார் ராமநாதன்.

    “உங்களுக்கு வேற வேலையே இல்லை.” என்று கழுத்தை நொடித்த மனைவியைப் பார்த்து சிரித்தார் ராமநாதன்.

    அதே நேரம் மேலே தனது அறையில் இந்தச் செல்ல சண்டையின் காரணக் கர்த்தாவான நம்ம மித்ரா, வெளியே ஹிப் ஹாப் பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டு, உள்ளே குளியல் அறையில், .”Sing in the Rain … iam shoiiiing in the rain.” என்ற பாடலை அதே பாணியில் ஹாயாகப் பாடிக்கொண்டே குளித்து முடித்தாள். அவள் அப்படிதான், கேட்டால், .”நாங்கல்லாம் வெளியே ஃபாரீன், உள்ளே லோக்கலு.” என்று டயலாக் விடுவாள். ஒரு வழியா அவள் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் இவங்க குடும்பத்தைப் பற்றிச் சின்ன அறிமுகம்.

    ராமநாதனின் தாய் மற்றும் தந்தை அவரின் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். உடன் பிறந்தவர்கள் என்று அவருக்கு யாரும் இல்லை. ஆகையால் ஊர் தலைவரின் உதவியால் பட்டபடிப்பு படித்து முடித்தார். பிறகு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தார். அவரின் திறமையால் அதுவும் கிடைக்க, அந்த ஊர் தலைவரே, அவருக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான, காயத்ரியை மணமுடித்து வைத்தார்.

    திருமணம் முடிந்து சில மாதங்களில் அவருக்குச் சென்னையில் வேலையில் சேர்வதற்கான உத்தரவு கிடைத்துவிட, ஊர் தலைவரிடம் நன்றி கூறிவிட்டுச் சென்னையில் வந்து செட்டில் ஆனார். தற்போது தமிழ்நாடு அரசு துறை ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர். இன்னும் இரண்டு வருடம் சர்வீஸ் பாக்கி உள்ளது.

    காயத்ரி குடும்பத் தலைவி ஹோம் மினிஸ்டர், இல்லை இல்லை ஹோம் பிரெஸிடெண்ட் என்று சொல்லும் அளவுக்கு இவர் அனுமதி தந்தால் தான் ஒரு மசோதாவே நிறைவேறும். அவருக்குக் கூடப்பிறந்தவர்கள் என்று ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர். அவர்கள் இருவரும் குடும்பத்துடன் கிராமத்தில் உள்ளனர்.

    மித்ரா சிறு வயதாக இருந்தபொழுது, வருடம் ஒரு முறை மட்டும் காயத்ரி தன் சொந்த ஊருக்கு செல்வார். மித்ரா கல்லூரி செல்ல ஆரம்பித்ததில் இருந்து அவர்களால் வருடம் தவறாமல் ஊருக்கு செல்ல முடியவில்லை. எப்போதாவது ஊருக்கு செல்வதோடு, அடிக்கடி தொலைபேசியில் தன் உடன் பிறந்தவர்களிடம் பேசிக்கொள்வார்.

    இவர்களின் ஒரே செல்ல மகள், 25 வயது மித்ரா. ஐந்தரை அடி உயரம் சந்தன நிறம். உயரத்திற்கு ஏற்ற அளவான உடல்வாகு உடையவள். சேட்டை செய்வதில் சிறு குழந்தைகளை மிஞ்சி விடுவாள். அவ்வளவு அருந்த வால்......!

    B.com Corporate Secretaryship முடித்துப் பின்னர் MBA முடித்து, கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அந்த அலுவலகம் வேறு ஊருக்கு இடம் மாறுவதால், வேறு வேலை தேடி கொண்டிருக்கையில், இன்று செல்லவிருக்கும் கம்பெனிக்கு SECRETARY CUM PA வேலைக்குச் செய்திதாளில் விளம்பரத்தை பார்த்து அப்ளை பண்ண, இதோ இன்று அதற்கான இன்டர்வியு.

    “அம்மா டிப்பன் ரெடியா, இன்டர்வியூக்கு டயம் ஆச்சு!.” என்று கத்தி கொண்டே கீழ் இறங்கி வந்தாள் மித்ரா.

    “எல்லாம் இப்ப சொல்லு. இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னா காலையிலே எழுந்து சீக்கிரம் கிளம்ப வேண்டியதுதானே, எல்லாம் கடைசி நேரத்தில் பரபரக்க வேண்டியது, ஒரு தடவை சொன்னா எங்க கேக்கிற!.” என்று மகளைக் கண்டித்தவாரே டிபன் தட்டை டைனிங் டேபிள் மீது வைத்தார் காயத்ரி.

    “அம்மா சீக்கிரம் போய் நான் என்ன ஆபீசை ஓபன் பண்ணி, கூட்டி பெருக்கவா போறேன். இன்டர்வியூக்கு தானே போறேன். பத்து மணிக்குப் போனா போதும்மா.”

    “ஆமா அப்படியே கூட்டி பெருக்கிட்டாலும், வானம் இடிஞ்சு விழுந்துடும். பொண்ணா லட்சணமா ஒரு வீட்டு வேலையைச் செய்றியா. ஒன்னும் கிடையாது, எத்தனை தடவை சொல்றேன். நாளைக்குப் போற இடத்தில உதவியா இருக்கும்ன்னு. சொன்னா கேட்டாதானே!!.”

    அவர் அப்படிச் சொன்னதும் மித்ரா ஸ்டைலாக நின்று கொண்டு, “அம்மா, இது வாலிப வயசு ! ஜாலியா என்ஜாய் பண்ணனும். அதை விட்டுட்டு நீ சொல்ற மாதிரி இப்பவே வேலையைச் செஞ்சேனா, அப்புறம் உன்னை மாதிரி கிழவியா ஆகுற வரைக்கும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும், இது எனக்குத் தேவையா ! நீயே சொல்லு ?.”

    “அடி கழுதை, என்கிட்டவே உன் வாலை ஆட்றியா. இரு உன் லஞ்சுல மொளகா பொடிய கொட்டுறேன்.” என்று விளையாட்டாகக் கூறினார் காயத்ரி.

    அதைக் கேட்டு அலறிய மித்ரா, “ஐயோ !!! படி அளக்கும் உலக நாயகியே, இப்படிச் செஞ்சுறாத தாயி, இந்தப் பக்த்தை செஞ்ச பிழையைப் பொறுத்தருளும் பார்வதி தேவியே!!.” என்று பயந்தவள் போலக் கூறி அவரின் முன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பி வணங்கினாள்.

    ஆனால் அப்படியும் அவள் தாய் சிரிக்காததால் அவரிடம், “சரி இதற்கு பிராயசித்தமாக அடியேள் பாடும் வெண்பாவை ஏற்றுகொள்வாய் தாயே!.” என்று கூற

    அதற்குக் காயத்ரி என்னவென்பது போலப் பார்க்க,

    தொண்டையைச் செருமிய மித்ரா, “வெள்ளை நிற கன்னி, பேச்சிலே மன்னி, சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி, ........இப்படியே சொல்லி கொண்டிருந்தவளை இடைமறித்த காயத்ரி, “போதும் இதுக்கு மேல பாடுன, இந்த நாட்டை விட்டு போறதை தவிர வேற எனக்கு வேற வழியே இல்லை.” என்று கூறி சிரித்தார்.

    அதில் நிம்மதி அடைந்த மித்ரா நெஞ்சில் கை வைத்துக் கொண்டு, “ஷப்பா முடியல ! உஃப் !!! உங்களைச் சமாதானப் படுத்த என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு!.”

    “போதும்டி கழுதை, உன் வாய் இருக்கே, சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பு.” – காயத்ரி

    “என்னம்மா என்ன சீக்கிரம் பேக் பண்ற, ஓ!! அப்பாகூட ரொமான்ஸ் பண்ணவா....ம்...ம், அதுவும் கரெக்ட் தான். நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா.”

    “அடியே போதும்டி இனிமே தாங்காது. இன்னைக்கு நீ என்ன கிண்டல் பண்ற கோட்டா முடிஞ்சிருச்சு. இடைத்த காலி பண்ற வழியைப் பாரு.”

    “நீ சொல்லாமலே நான் கிளம்பனும் தான் ஏன்னா, எனக்கு டைம் ஆயிடுச்சு.” என்று அவரின் கன்னத்தைப் பிடித்து இப்படி அப்படி ஆட்டிவிட்டாள்.

    பிறகு டேபிளில் அமர்ந்து சாப்பாட்டுத் தட்டில் கை வைக்கப் போனவள், சந்தேகமாகக் காயத்ரியை பார்த்து, “அம்மா ஒரு சின்ன டவுட். இதுல எதுவும் பொடி கலக்கலையே?!.”

    “இன்னும் கலக்கல, வேணும்ன்னா சொல்லு, இப்பவே கலந்து தரேன்.” என்று காயத்ரி சீரியஸாகச் சொல்ல,

    “மாப்பு வச்சுடாத ஆப்பு, அழுதுடுவேன் அவ்வவ்!.” என்ற சொல்லிவிட்டு கட கடவெனச் சாப்பிட்டு முடித்தவள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

    நேரே தன் தந்தையிடம் சென்றவள், “அப்பா கொஞ்சம் உங்க காரில் என்னை ட்ராப் செய்றிங்களா ப்ளீஸ்?!.” என்று அவரைத் தஞ்சம் அடைந்தாள்.
“உன் ஸ்கூட்டி என்ன ஆச்சுடி.”-- அம்மா

    “அதுக்கு என்னமா நல்லா தான் இருக்கு. காரில் போய் இறங்கினா தான் ஒரு கெத்தா இருக்கும். அதுக்குத் தான்.”

    “நீ என்னடி அந்தக் கம்பெனியோட ஓனரா? கெத்தா போய் இறங்கிறதுக்கு. வேலைக்குத் தானே, அது கூட இல்ல. இன்டர்வியூக்கு தானே போற.”

    “என்னம்மா இப்படிச் சொல்லிட்ட. நான் யாரு, சொல்லும்மா நான் யாரு. உனக்குத் தெரியல. நானே சொல்றேன், த கிரேட் மித்ரா, ஆபீஸ் வாசல்ல போய் இறங்கும்போது, இந்த ரஜினி, கமல், விஜய், அஜித் படத்தில இன்ட்ரோ சாங்கல வர மாதிரி ஒரு பேக்கிரௌண்ட் மியூசிக் தான் இல்லை. அட்லீஸ்ட் ஒரு காரு கூடவா இருக்கக் கூடாது.”

    அப்படிச் சொன்னதும் தன் தாய் குணிந்து எதையோ தேடுவதைப் பார்த்தவள், அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள்.

    “அம்மா உன்னோட என்ன பேச்சு. அப்பா நீங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா. இதோ வந்திட்டேன்.”

    “செரி வாமா குறும்புக்காரி.” என்று காரை ஸ்டார்ட் செய்தார் ராமநாதன்.

    “அப்பானா அப்பா தான். நீயும் இருக்கயே மா, வாங்கப்பா போலாம்.” என்றவள் அப்பாவுடன் இண்டிகா காரில் அலுவலகம் நோக்கி சென்றாள்.

    இருவரும் காரில் சென்று கொண்டிருக்க, மித்ரா தாயை பற்றிப் புகார் கூறி கொண்டிருந்தாள். அதைக் கேட்ட ராமநாதன், “காலையில எல்லார் வீட்லையும் சுப்ரபாதம் கேட்பாங்க. ஆனா நம்ம வீட்லையோ உங்க மகாபாரதம்.” என்று சொன்னவர் மேலும், “ஆனா ஒன்னு, தினமும் உங்க சண்டைய கேட்கலைன்னா எனக்கு அந்த நாளே விடியாத மாதிரி இருக்கும்.” என்று சொல்லி சிரித்தார்.

    இதைக் கேட்டு முறைத்த மித்ரா, “இருக்கும்...இருக்கும்...அப்பா திஸ் இஸ் டூ பேட், இருங்க அம்மா கிட்ட சொல்றேன்.” என்று சொல்ல.

    அதைக் கேட்டுச் சோகம் போல முகத்தை வைத்துக் கொண்ட ராமநாதனோ, “என்னதான் சண்டை போட்டாலும் என்னைத் திட்டனும்னா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துடுவீங்களே, இந்தப் பொம்பளைங்கள நம்பவே முடியல. எப்ப ஒன்னு சேருவாங்க, எப்ப அடிச்சுப்பாங்கன்னே சொல்ல முடியல!!.” என்று செல்லமாகக் கோபித்துகொள்ள, அதற்கு மித்ரா, “you are right dad, a women’s heart is deeper than a ocean, hidden with full of secretes. A man can never find its depth.” என்று கூறி கண்ணடிக்க, அதற்கு ‘ஆம்’ என்பது போலச் சிரித்தார் ராமநாதன்.

    இப்படியே பேசிக்கொண்டே இருந்த மித்ரா, தூரத்தில் தெரிந்த கட்டிடத்தைக் காட்டி, “அப்பா அதோ அந்த ஆபீஸ் தான்.” என்று கூறியவள், ராமநாதன் அந்த அலுவலக வாசலில் காரை நிறுத்தியதும் அங்கு இறங்கி கொண்டாள்.
“bye பா.”...என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

    சென்னை OMR ரோட்டில் இருந்த அந்த ஐந்து மாடி கட்டிடம் கண்ணாடியால் மிக அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. மித்ரா உள்ளே சென்று வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் இன்டர்வியூ நடக்கும் தளத்தைத் தெரிந்து கொண்டு மாடி ஏறினாள்.

    மூன்றாம் மாடியில் இருந்தது அந்த அலுவலகம். அங்கே வரவேற்பறையில் கிடந்த ஒரு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து பேர் இன்டர்வியூக்கு அழைக்கப் பட்டிருந்தனர்.

    சுற்றி அலுவலகத்தை ஒரு முறை பார்த்தாள். ‘பரவா இல்லை நல்லா தான் இருக்கு. இங்க வேலை கிடைச்சா சூப்பரா இருக்கும். வெளியில ஒரு கெத்தா சொல்லிக்கிலாம். முன்ன வேலை பார்த்தோமே அதெல்லாம் ஒரு ஆபீசா. ச்சே! ச்சே! அந்தத் தகர டப்பாவை போய் இந்த ஆபீஸ் கூடக் கம்பேர் பண்றது MTC பஸ் கூடப் பிரைவேட் வீடியோ கோச் ஏஸி பஸ் கூட கம்பேர் பண்ற மாதிரி இருக்கு. நல்லாவே இல்லை’ இப்படியாக மனதுக்குள் நினைத்து கொண்டாள். பிறகு இன்டர்வியுவில் தன் பெயர் அழைக்கப் படுவதற்காகக் காத்து கொண்டிருந்தாள்.

கதைச்சுருக்கம் படிக்க

0 comments

Post a Comment

Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook