புத்தக வெளியீடு
வணக்கம் தோழமைகளே!
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரமா பதிப்பகம் சார்பில், 'உன் பாதியும் என் மீதியும்' மற்றும் ‘மாசறு நிலவே’ என்ற இரண்டு நாவல் புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
புத்தகம் வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொள்ளவும்.
பிரியா நிலையம் - 9444462284
ரமா பதிப்பகம் - 8610667321
விலை விவரம்:
மாசறு நிலவே - ரூ.190.00
உன் பாதியும் என் மீதியும் - ரூ.230.00
அன்புடன்,
ரமாலஷ்மி.
கதைச் சுருக்கம்:
மாசறு நிலவே
அழகான குடும்பமாய் வாழும் காயத்ரி, சூழ்நிலையின் காரணமாக ஆபத்தில் சிக்க, அவளின் மரியாதை கேள்விக்குறியாக்கப்பட்டு, நிலைகுலைந்து போகிறது அவளின் குடும்ப வாழ்க்கை. அன்னையாக இருக்கவேண்டியவர் அவளைத் தேளாய் கொத்த, காக்கவேண்டியவனோ விலக்கி வைக்கிறான். தன் மரியாதையை காப்பாற்ற அவள் என்ன முடிவெடுக்கிறாள்? அவள் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? மனித உணர்வுகளை அழகாய் எடுத்துச்சொல்கிறது ‘மாசறு நிலவே’ நாவல்.
உன் பாதியும் என் மீதியும்
தனக்கெதற்கு வம்பு என்ற வாழும் சமுதாயத்தில், அநீதியை எதிர்த்துத் தனியே சட்ட போராட்டம் நடத்தும் மைதிலி, அவள் போராட்டத்தை மட்டுமில்லாமல் அவளின் உயிரையும் காவு வாங்க துடிக்கும் வைபவ். மைதிலிக்கு அரணாய் இருவர், அரவிந்த் மற்றும் ரிஷி. அவளின் போராட்டம் வெற்றி பெற்றதா? துணையாய் வந்தவன் வாழ்கையில் இணைந்தானா? என்பதை விறுவிறு சஸ்பென்ஸ் மற்றும் மெல்லிய காதலுடன் சொல்கிறது, ‘உன் பாதியும் என் மீதியும்’ நாவல்.



0 comments
Post a Comment