எங்கிருந்தோ வந்தாள் - புத்தக வெளியீடு
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புத்தாண்டு தினத்தில் ஓர் மகிழ்ச்சியான செய்தி. வரும் சென்னை புத்தக கண்காட்சிக்கு, எழுத்தாளர் மல்லிகா மணிவண்ணன் அக்காவின் தளத்தில் நடைபெற்ற ‘கனவுப்பட்டறை கதைத் தொழிற்சாலை போட்டியில் வாசகர்களின் வரவேற்பை பெற்ற ‘எங்கிருந்தோ வந்தாள்’ நாவல் ரமா பதிப்பகம் சார்பாக புத்தகமாக வெளியிடப்படுகிறது.
முதல் முயற்சியாக படங்களும் இந்நாவலில் இடம்பெறுகிறது!
கதையின் நாயகி மாதுரி மேத்தாவின் ஆளுமையும், துரோகத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிராக அவளின் போராட்டமும் வாசகர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பட்ட தோழமைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, பாராட்டையும் பெற்றுத் தந்தது எழுத்தாளராக என் எழுத்துக்கு கிடைத்த கூடுதல் அங்கீகாரம்.
எனது நாவல்களின் வரிசையில் எங்கிருந்தோ வந்தாள் நிச்சயம் ஒரு மைல்கள். இந்நாவலை இந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் எழுத, வாசர்களின் தொடர் ஆதரவும், விமர்சனமும் மிக முக்கியப் பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத ஒன்று.
பிரியா நிலையம் மற்றும் அருண் பதிப்பகத்தில் விரைவில் இப்புத்தகம் கிடைக்கும். அரங்குகள் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
அன்புடன்,
ரமாலஷ்மி.
ரமாலஷ்மி.
கதைச்சுருக்கம்:
மனநல காப்பகத்தின் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் நாயகியை கொல்ல முயற்சிகள் நடைபெறுகிறது. நாயகன் ASP சுதர்ஷன் மற்றும் பத்திரிக்கைத் துறையை சேர்ந்த மிதுன் சஞ்சனா ஜோடி நாயகி யார் என்ற உண்மையை துப்பறிய, நாயகியின் கணவன் தான் கொலையாளி என்ற உண்மை தெரிகிறது.
வைர வியாபாரியின் மகளான, வழக்கறிஞர் மாதுரி, எப்படி மனநல காப்பகத்தில்? அவள் கணவனே அவளைக் கொல்லத் துடிப்பதின் காரணம் என்ன? இவனுக்குப் பின்னால் இருக்கும் அந்த உச்ச அதிகாரம் படைத்த நபர் யார்? அவரின் பங்கு இதில் என்ன? என்பதை விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் கலந்து சொல்கிறது இந்நாவல்.

0 comments
Post a Comment